உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 128 சிறார் திருமணங்கள் நிறுத்தம்

128 சிறார் திருமணங்கள் நிறுத்தம்

தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டு 128 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், 33 சிறார் திருமணங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்வது அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் ஒரு சில பகுதிகளில் பெண்குழந்தைகளுக்கு சிறுவயதில் திருமணம் அவ்வப்போது நடந்து வருகிறது. மாவட்டத்தில் 2023ல் சிறார் திருமணம் தொடர்பாக 161 புகார்கள் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு வந்துள்ளன. இவற்றில் 128 திருமணங்கள் அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் 33 திருமணங்கள் நடந்துள்ளன.நடைபெற்ற இத்திருமணங்கள் பற்றி அரசுத்துறைகள், குழந்தைகள் நலக்குழு சார்பில் போலீசில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறுகையில், கடமலைக்குண்டு, கம்பம் பகுதிகளில் அதிக குழந்தை திருமணங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.குழந்தை திருமணத்தின் தீமைகள் பற்றி அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லுாரிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் எங்கேயாவது குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி