உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்டத்தில் 14 ஆயிரம் வழக்குகள் பதிவு  தென்கரை ஸ்டேஷனில் ஒரு ஆண்டில் 844 வழக்கு

 மாவட்டத்தில் 14 ஆயிரம் வழக்குகள் பதிவு  தென்கரை ஸ்டேஷனில் ஒரு ஆண்டில் 844 வழக்கு

தேனி: தேனி மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் போலீஸ் ஸ்டேஷன்களில் 14,400க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரியகுளம் சப்டிவிஷன் தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் அதிகபட்சமாக 844 வழக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் 5 சப் டிவிஷன்களில் 36 போலீஸ் ஸ்டேஷன்கள், 2 மதுவிலக்கு பிரிவு, எஸ்.பி., அலுவலகத்தில் சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. இந்த ஸ்டேஷன்களில் 2025 ஜன., 1 முதல் டிச. 31 வரை ஒரு ஆண்டில் 14,400க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக அள வில் தென்கரையில் 844 எப்.ஐ.,ஆர்.,கள் பதிவு ஆகி உள்ளது. குறைந்தளவு எப்.ஐ.ஆர்., பெரியகுளம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் 44 வழக்குகள் பதிவாகி உள்ளன. சப் டிவிஷன் வாரியாக வழக்கு விபரம் தேனி: தேனி 810, பழனிசெட்டிபட்டி 705, அல்லிநகரம் 574, வீரபாண்டி 557, அனைத்து மகளிர் ஸ்டேஷன் 59. போடி: போடி டவுன் 612, தாலுகா 625, குரங்கனி 68, தேவாரம் 363, கோம்பை 288, சின்னமனுார் 719, ஹைவேவிஸ் 47, அனைத்து மகளிர் ஸ்டேஷன் 56. உத்தமபாளையம்: உத்தமபாளையம் 808, ஓடைபட்டி 511, ராயப்பன்பட்டி 484, கம்பம் தெற்கு 531, கம்பம் வடக்கு 502, கூட லுார் தெற்கு 300, கூடலுார் வடக்கு 479, குமுளி 88. ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் 746, வைகை அணை 167, க.விலக்கு 313, ராஜாதானி 416, கண்டமனுார் 311, கடமலைக்குண்டு 469, மயிலாடும்பாறை 197, வருஷநாடு 188, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷன் 45. பெரியகுளம்: பெரியகுளம் 474, தென்கரை 844, தேவதானப்பட்டி 624, ஜெயமங்கலம் 429, மகளிர் போலீஸ் 44 வழக்குகள் பதிவாகி உள்ளன.இது தவிர சைபர் கிரைம் போலீசில் 55, மாவட்ட குற்றப்பிரிவில் 32, தேனி மதுவிலக்கில் 177, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசில் 270 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை