உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி

கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி

--தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கார் மீது லோடு வேன் மோதிய விபத்தில் தெலங்கானா ஐயப்ப பக்தர்கள் இருவர் பலியாகினர்.தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், பத்துவேல் அருகே ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சீத்தாராம் 48. மகன் சரண் 27. நண்பர்கள் போத்தன்னா 45. சிவக்குமார் 42, சீத்தாரம் மனைவி சாவித்திரி 40.அவரது அண்ணன் மகள் தீபிகா 10. ஆகியோர் காரில் டிச.,16 வத்தலகுண்டு வந்தனர். அங்குள்ள விடுதியில் சாவித்திரி, தீபிகா தங்கினர். மற்றவர்கள் காரில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று காலை வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சீத்தாராம் ஓட்டினார். பெரியகுளம்- திண்டுக்கல் ரோடு காட்ரோடு அருகே காலை 5:10 மணிக்கு கார் மீது, பொள்ளாச்சியில் இருந்து போடி நோக்கி சென்ற லோடு வேன் மோதியது. இதில் சீத்தாராம், போத்தன்னா தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் அப்பாஸ் 40, என்பவரிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை