உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்

வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்

தேனி: வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து திரும்பிய வேன் கவிழ்ந்து 23 பேர் காயமடைந்தனர்.தேனி கோட்டைக்களம் தெரு நாகபாண்டி 29. இவர் நேற்று அதிகாலை தேனியில் 25க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு ஆண்டிபட்டியில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து மதியம் ஆட்களை ஏற்றிக் கொண்டு தேனி திரும்பினார். குன்னுார் ஆற்றுப்பாலம் கடந்து வந்தபோது வேனுக்கு முன்னால் அல்லிநகரம் பழனியப்பன் 51, ஓட்டிச் சென்ற டூவீலர் திடீரென வலதுபுறம் திரும்பியது. இதனால் விபத்தை தவிர்க்க நினைத்த வேன் டிரைவர் வலது புறம் திருப்பினார். இதில் ரோட்டின் மத்தியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதிய வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் முன்புற கண்ணாடி,வேனின் இடதுபுற சேதமடைந்தது. வேனில் பயணித்த அல்லிநகரத்தை சேர்நத ராஜலட்சுமி 44, கணிக்கில் 50, ஜெயந்தி 48, மணி 51, குருவம்மாள் 70, உமாராணி 52, வேலம்மாள் 52, சாந்தி 52, முத்துலட்சுமி 58, சித்ரா 47, ராஜாமணி 57, திவ்யபிரியா 52, பாலாபத்மினி 52, அமராவதி 65, தனலட்சுமி 55, தினேஷ்குமாரின் மூன்று வயது மகள் ருத்ரா, டூவீலரில் பின்புறம் பயணித்த தேவி 46, உட்பட 23 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை