உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் குழுவில் 2.8 டன் தேங்காய் விற்பனை

வேளாண் குழுவில் 2.8 டன் தேங்காய் விற்பனை

தேனி : தேனி வேளாண் விற்பனை குழு மூலம் 2.8 மெட்ரிக் டன் மட்டை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் இ-நாம் எனும் ஆன்லைன் ஏலம் மூலமும், நேரடி ஏலம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தேனி விளைபொருட்களை வாங்கி செல்கின்றனர்.தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2.8 மெட்ரிக்டன் மட்டையுடன் தேங்காய் விற்பனைக்கு வந்தது. விற்பனைகுழு செயலாளர் ராஜா தலைமையில் ஏலம் நடந்தது. இந்த தேங்காய் டன் ரூ.14ஆயிரம் விலையில் ரூ.35,770க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் அதிகபட்சம் கிலோரூ.141க்கும், குறைந்தபட்சம் ரூ.93க்கும் விற்பனையானது. விற்பனை குழுவில் முதன் முறையாக மட்டையுடன் தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை