உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 30 ஆண்டு தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் தவிப்பில் நீர்வளத்துறை பணியாளர்கள்

30 ஆண்டு தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் தவிப்பில் நீர்வளத்துறை பணியாளர்கள்

கம்பம் : 'பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள், தங்களை அரசு நிரந்தரமாக்க வேண்டும்.' என, வலியுறுத்தி தவித்து வருகின்றனர்.பொதுப்பணித் துறை, நீர் வளத்துறையில் 30 ஆண்டுகளாக 1458 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். தலைமை செயலக பராமரிப்பு, நீதிபதிகளின் இல்லங்கள், அமைச்சர்கள் இல்லங்கள், மருத்துவமனைகள் பராமரிப்பு, ஏரிகள், குளங்கள், அணைகள் பராமரிப்பு, மின் கம்பியாளர், டிரைவர், விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட என்னற்ற பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் 22 வயதில் பணியில் சேர்ந்தவர்கள் தற்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருகின்றனர். பொதுப் பணித்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் பணி வரன்முறை செய்ய விதி உள்ளது. அதன் பேரில் 2011ல் கோப்புகள் தயாரானது. ஆனால் அந்த கோப்புகள் மீது, இன்று வரை நடவடிக்கை இல்லை. சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிரந்தர பணி ஆணை பெற்றுள்ளனர். பலர் பணி நிரந்தரம் ஆகாமலேயே ஓய்வு பெற்றனர். தற்போது பணியில் உள்ளவர்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக உள்ள இவர்களை நிரந்தரமாக்கிட அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.இச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், '30 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராகவே உள்ளோம். நீர்வளத் துறை அமைச்சர் எதிர்கட்சியாக இருந்த போது எங்களுக்காக குரல் கொடுத்தார். தற்போது அவரே துறை அமைச்சராக உள்ளார். நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். எங்களை பணி நிரந்தம் செய்வதால் பெரிய அளவில் நிதி தேவைப்படாது. பணி நிரந்தரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்