உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்

 டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் காயம்

தேவதானப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35. இவரது மனைவி பாரதி 32. மகள்கள் லட்சிக்காஸ்ரீ 9, அக்சிக்காஸ்ரீ 6, ஆகிய 4 பேர் டூவீலரில், ஆண்டிபட்டி தாலுகா கொத்தபட்டியில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றனர். விசேஷம் முடிந்து ஊருக்கு திரும்பினர். பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு ஜி.மீனாட்சிபுரம் அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் சென்ற மகேந்திரன் உட்பட 4 பேரும் காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய சின்னமனூர் பெரிய பள்ளிவாசல்தெருவைச் சேர்ந்த ராஜா அப்துல்காதரிடம், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை