உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

தேனி: தேவாரம் அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி மேற்குத் தெரு கூலித் தொழிலாளி எஸ்.அந்தோணி 62. இவர் கடந்த 2018 ல் அதே ஊரில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது செவித்திறன் குறைபாடு உள்ள கிழக்குத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி எம்.அந்தோணி 65, அங்கு வந்தார்.எஸ்.அந்தோணி பேசியதை தவறாக புரிந்து கொண்டு அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். பலத்த காயம் அடைந்த எஸ்.அந்தோணி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவாரம் போலீசார் எம்.அந்தோணி மீது, கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக விவேகானந்தன் ஆஜரானார். இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சுரேஷ், குற்றவாளி எம்.அந்தோணிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை