மேலும் செய்திகள்
நவ.,23,24ல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
22-Nov-2024
தேனி : மாவட்டத்தில் இரு நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாமில் 8,654 மனுக்கள் பெறப்பட்டன.தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 563 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் நடந்தன. முகாமில் பெயர் சேர்க்க 5,665 பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 3 பேர், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் என 2437 பேர், பெயரை நீக்கக் கோரி 547 மனுக்கள் என, மொத்தம் 8,654 மனுக்கள் வழங்கப்பட்டன. பெரியகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் செயல்பட்ட முகாமை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
22-Nov-2024