உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ பயணிக்கு அடி நால்வர் மீது வழக்கு

ஆட்டோ பயணிக்கு அடி நால்வர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் தெய்வம் 50. ஜெயமங்கலத்தில் உறவினர் வீட்டு காதணி விழா ஏற்பாடுகளை செய்து விட்டு, மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் கிளம்பினார். டிரைவர் நித்திஸ் ஓட்டினார். ஆட்டோவில் நித்திஷின் நண்பர்கள் ராஜபாண்டி, சிவன்பாண்டி, உதயகுமார் ஆகியோர் இருந்தனர். இவர்களிடம் தெய்வம், முன்பு நடந்த பிரச்னை தொடர்பாக நம்ம உறவின்முறை கூட்டத்தில் தலைவரை ஏன் எதிர்த்து பேசினீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு நான்கு பேரும் தெய்வத்தை அவதூறாக பேசி அடித்து ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டும், ராஜபாண்டி கத்தியின் கைப்பிடியால் தெய்வத்தை அடித்து காயப்படுத்தினார். மேலும் நான்கு பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஜெயமங்கலம் எஸ்.ஐ.,முருக பெருமாள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை