உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் குப்பை கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ரோட்டில் குப்பை கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மூணாறு: மூணாறில் லெட்சுமி எஸ்டேட் செல்லும் ரோட்டில் குப்பை கழிவுகளை கொட்டிய ஆனச்சாலைச் சேர்ந்த தினேஷ்க்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.சமீபத்தில் தினேஷ் வீட்டில் பெயிண்டிங் பணிகள் நடந்தன. அதில் மிஞ்சிய குப்பை, கழிவுகள் ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றில் 15 கி.மீ. தொலைவில் மூணாறில் லெட்சுமி எஸ்டேட் செல்லும் ரோட்டில் கொட்டினர். மூணாறு ஊராட்சியினர் நடத்திய ஆய்வில் தினேஷ் குறித்து தெரியவந்தது.ஊராட்சி செயலர் சகஜன் தலைமையில் ஊழியர்கள் தினேஷ் வீட்டிற்கு நேரில் சென்று விதிமுறை மீறி குப்பை கொட்டியதை எடுத்துரைத்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை