உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை

 மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் புண்ணியவேலின் மளிகை கடையை 23வது முறையாக படையப்பா காட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதே பகுதியில் கோயிலை சேதப்படுத்தி பூஜைக்கு வைத்திருந்த பழங்களையும் தின்றது. அங்கு கடையுடன் சேர்ந்துள்ள வீட்டில் புண்ணியவேலு குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது கடையை கடந்த 15 ஆண்டுகளில் 22 முறை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு புண்ணியவேலுவின் மளிகை கடைக்கு சென்ற படையப்பா ஆண் காட்டு யானை கடையை சேதப்படுத்தியது. அதனுள் இருந்த அரிசி உள்பட பல்வேறு பொருட்களை தின்று சேதப்படுத்தி சென்றது. கோயில் சேதம்: அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூஜைக்கு வாழை பழம் உள்பட பல்வேறு பழங்களை வைத்திருந்தனர். கோயிலை சேதப்படுத்திய படையப்பா பழங்களையும் தின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை