| ADDED : பிப் 16, 2024 06:19 AM
பெரியகுளம்: சருத்துப்பட்டியில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சுகாதாரத்தை ஆய்வாளருக்கு அடி விழுந்தது. இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஞானகிரிமூர்த்தி 38. வடபுதுப்பட்டியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு சுகாதாரத்துறை உத்தரவுப்படி டெங்கு கொசு ஒழிப்பதற்காக வீடுகளில் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. அப்போது சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மதுரைவீரன் 23. வீட்டிற்கும் மருந்து தெளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மதுரை வீரனுக்கும், ஞானகிரி மூர்த்திக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில் ஞானகிரிமூர்த்தி வீட்டிற்குச் சென்ற மதுரைவீரன், சுகாதாரத்துறையில் என் மீது புகார் தெரிவிக்கிறாயா என கூறி ஞானகிரிமூர்த்தி அவரது தந்தை முருகேசனை கம்பால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார் மதுரைவீரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.மதுரைவீரன் புகாரில், ஞானகிரி மூர்த்தி குடிநீரில் மருந்தை ஊற்றினார். ஏன் என்று கேட்டதற்கு ஞானகிரிமூர்த்தி அவரது தாயார் முருகேஸ்வரி, தந்தை முருகேசன், உறவினர்கள் பாலா, பாலமுருகன் ஆகியோர் கீழே தள்ளிவிட்டு துடைப்பத்தால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இவர் புகாரில் ஞானகிரிமூர்த்தி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.--