உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொச்சி - தனுஷ்கோடி சாலையில் காட்டு யானை கூட்ட ம் போக்குவரத்து பாதிப்பு

கொச்சி - தனுஷ்கோடி சாலையில் காட்டு யானை கூட்ட ம் போக்குவரத்து பாதிப்பு

மூணாறு : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே தோண்டிமலை பகுதியில் ரோட்டில் காட்டு யானைகள் நடமாடியதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சமீப காலமாக பூப்பாறை பகுதியில் 5 வயதுக்கு உட்பட்ட இரண்டு யானைகள் உள்பட எட்டு காட்டு யானைகள் கூட்டம் நடமாடி வருகின்றன. அவற்றை எட்டு யானை கூட்டம் என அழைக்கின்றனர். அவை, நேற்று காலை 8:30 மணிக்கு கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே தோண்டிமலை பகுதியில் நடமாடின. அதனால் வாகனங்கள் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. வனத்துறை ஆர்.ஆர்.டி. பிரிவினர் ரோட்டில் போக்குவரத்தை தடை செய்து யானைகளை ஏலத்தோட்டத்தினுள் விரட்டினர். காட்டு யானைகள் ரோட்டில் நடமாடியதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை