உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டெங்கு பாதித்த கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம் வீடு, வீடாக கணக்கெடுப்பு

டெங்கு பாதித்த கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம் வீடு, வீடாக கணக்கெடுப்பு

-தேவதானப்பட்டி : டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதித்த சங்கரமூர்த்திபட்டியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சி சங்கரமூர்த்திபட்டி கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ், ரம்யா மகன் மோகித்குமார் 10. அக்.14 ல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அக்.17 ல் உயிரிழந்தார். இந்தப்பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி 14.கிரித்திக் 10 ஆகிய இருவர் டெங்கு காய்ச்சலாலும், பூமிஜா 6. ஹரீஷ் 17 ஆகியோர் வைரஸ் காய்ச்சலால் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ்வந்த் 7. ஜோதி பிரபா 9. ஆகியோர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சுகாதாரப் பணி: நேற்று ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் குடிநீர் மேல்நிலை தொட்டி தூய்மைப்படுத்தியும், குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டது. தெருக்களில் தேங்கியிருந்த குப்பை, சாக்கடை அகற்றி தூய்மை பணிகளை முடுக்கி விட்டனர். வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் கோமதி மேற்பார்வையில் வைகை அணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தாரண்யா, சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், லத்தீப் அலிகான் ஆகிய சுகாதாரத்துறையினர், மோகித்குமார் வீட்டருகே 3 பேருக்கு ரத்தமாதிரிகள் சேகரித்தனர்.நில வேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. வீடு தோறும் காய்ச்சல் பாதிப்பு குறித்து சர்வே செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை