உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பமெட்டு வனப்பகுதியில் ஒருவர் எரித்து கொலை

கம்பமெட்டு வனப்பகுதியில் ஒருவர் எரித்து கொலை

கம்பம : கம்பமெட்டு வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.குமுளியிலிருந்து கம்பமெட்டு, நெடுங்கண்டம், போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதிகள் கேரளாவை ஒட்டி அமைந்துள்ளது.தமிழக பகுதிகள் வனங்களாகவும், கேரளா பகுதிகள் குடியிருப்புகளாகவும் உள்ளது. எனவே கேரளாவை சேர்ந்த சமூக விரோத கும்பல், தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத செயல்களை செய்து வருகின்றனர்.நேற்று காலை கம்பம் மேற்கு வனச்சரகத்திற்குட்பட்ட கம்பமெட்டு அருகே மந்திப்பாறை என்ற வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின், கம்பம் தெற்கு போலீசார், கேரள போலீஸ் மற்றும் வன அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.பிரேதம் கிடந்த இடம் தமிழக வனப்பகுதி என்பதால், கம்பம் தெற்கு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை