உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு அருகே மஞ்சு விரட்டில் மாடு முட்டி பார்வையாளர் காயம்

மூணாறு அருகே மஞ்சு விரட்டில் மாடு முட்டி பார்வையாளர் காயம்

மூணாறு : மூணாறு அருகே வட்ட வடையில் நடந்த மஞ்சு விரட்டில் மாடு முட்டி ஒருவர் பலத்த காயமடைந்தார்.கேரளாவில் மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் ஆண்டுதோறும் மஞ்சு விரட்டு நடத்தப்படும். அங்குள்ள வட்டவடை, கோவிலூர், கொட்டாக்கொம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழர்களால் மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது. இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் மஞ்சு விரட்டு வெகு சிறப்பாக நடந்தது. அதனைக் காண பொது மக்கள் உள்பட மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். மஞ்சு விரட்டில் பங்கேற்ற மாடுகளை தமிழர்களின் மரபுபடி இளைஞர்கள் ஏராளமானோர் விரட்டிச் சென்று அடக்க முயன்றனர்.பலத்த காயம்: மஞ்சு விரட்டின்போது பார்வையாளர் கூட்டத்தில் புகுந்த மாடு முட்டியதில் கோவிலூரைச் சேர்ந்த முருகன் 65, பலத்த காயமடைந்தார். அவர் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை