உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சொட்டு நீர் பாசனத்தில் சாதனை

 சொட்டு நீர் பாசனத்தில் சாதனை

கம்பம்: சொட்டு நீர் பாசனம் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கம்பம் வேளாண் அதிகாரிகள் சாதித்துள்ளனர். வேளாண் பயிர் சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால் தண்ணீர் தேவை குறைகிறது. பயிர்களின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. கூடுதல் மகசூல் கிடைக்கும். பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்படுகிறது. எனவே அரசு சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது. 2025- -2026 ம் நிதியாண்டிற்கு தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களுக்கும் வேளாண் துறை அதிகபட்சம் 125 எக்டேர் இலக்கு நிர்ணயித்தது. அதில் கம்பம் வட்டாரம் இலக்கை தாண்டி 145 எக்டேரில் சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளது. வேளாண் உதவி இயக்குநர் தெய்வேந்திரன், வேளாண் அலுவலர் கெளதம், துணை அலுவலர் குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த இலக்கை எட்ட களப்பணியாற்றினர். தற்போது சொட்டு நீர் பாசனம் அமைத்த வேளாண் பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ