உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் உயிர்ப்பலியை தடுக்க நடவடிக்கை தேவை

 தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் உயிர்ப்பலியை தடுக்க நடவடிக்கை தேவை

கம்பம்: தேனி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அதிகரிக்கும் விபத்துக்களால் உயிர்ப்பலி தொடர்கிறது. இதனை தடுத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மதுரை முதல் மூணாறு வரை ( உசிலம்பட்டி, தேனி, போடி வழி ) தேசிய நெடுஞ்சாலை எண் 85 ஆகவும், திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை 183 ஆகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆன பின் தேனி மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் தேனி முதல் கம்பம் வரை பல இடங்களில் சென்டர் மீடியன் வைத்துள்ளனர். குறுகலான ரோட்டில் சென்டர் மீடியன் வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் குறிப்பாக டூவீலர்களை இயக்குபவர்கள் பதட்டத்தில் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த வாரம் கம்பத்தில் இருந்து உத்தமபாளையத்திற்கு டூவீலரில் சென்ற தம்பதியர் காக்கில் சிக்கையன் பட்டி அருகில் அமைக்கப்பட்டு உள்ள சென்டர் மீடியன் காரணமாக பலியானார்கள். இதே போன்று கோட்டூர் அருகிலும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்டர் மீடியன் வைக்கப்படுள்ளது. உத்தமபாளையம் முதல் கம்பம் வரை குறிப்பிட்ட சில இடங்களில் அதாவது காக்கில் சிக்கையன் பட்டி, கோவிந்தன்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஊர்களில் நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் மழை நீர் செல்ல பெரிய சைஸ் கழிவு நீர் ஓடை ஒன்றை கட்டி, அதன் மீது சிமென்ட் சிலாப் அமைத்துள்ளனர். இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் இடது புறம் ஒதுங்க முடியாது. அவ்வாறு ஒதுங்க முடியாததால் தான் தம்பதியர் பலியாகினர். எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை விபத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை