உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புதிய வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை ; கம்பம் நகராட்சி கூட்டத்தில் தகவல்

புதிய வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை ; கம்பம் நகராட்சி கூட்டத்தில் தகவல்

கம்பம் : கம்பம் நகராட்சியில் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள புதிய வாரச்சந்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் மாதவன், கட்டி முடிக்கப்பட்டு வாரச்சந்தை பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. வாரச்சந்தை நாட்களில் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.மொகைதீன் ஆண்டவர்புரம் பள்ளியில் கழிப்பறையை பராமரிப்பு செய்ய தி.மு.க., கவுன்சிலர் சாதிக் வலியுறுத்தினார்.சேனை ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தி.மு.க., கவுன்சிலர் அன்பு குமாரி கோரினார். இதற்கு பதிலளித்த தலைவர் வனிதா, வாரச்சந்தை முதல்வர் காணொலியில் திறக்க இருப்பதால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. விரைவில் வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் இந்த கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கமிஷனர் வாசுதேவன், துப்புரவு அலுவலர் அரசகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்