தேனி: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தேனி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சி பகுதியில் நடத்தினர்.தேனி நேரு சிலை அருகே நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து நிர்வாகிகள் பதாகை ஏந்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் பார்த்திபன், மாவட்ட அவைத்தலைவர் முருகன், துணைச்செயலாளர் சோலைராஜ், நகர துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், மதுரை மண்டல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் பாலசந்தர், மாணவரணி மாவட்ட தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கம்பம் : டிராபிக் சிக்னல் அருகில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமை வகித்தார். திரளாக அ.தி.மு.க.வி.னர் பங்கேற்றனர். சின்னமனூரில் காந்தி சிலையில் இருந்து மார்க்கையன்கோட்டை விலக்கு வரை மனித சங்கிலி நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ஜக்கையன், நகர் செயலாளர் பிச்சைகனி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, ஓடைப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் அ.தி.மு.க, சார்பில் மனித சங்கிலி - போராட்டம் நடைபெற்றது.ஆண்டிபட்டி: அ.தி.மு.க., சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர செயலாளர் அருண்மதிகணேசன், ஜெ.பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப்பொருள் விற்பனையை தடுக்ககோரி கோஷமிட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., நிர்வாகிகள் பொன்முருகன் கவிராஜன், வீரக்குமார், சாம்சன், விஜய்நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போடி: மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் தலைமையில் நடந்தது. போடி வடக்கு நகர செயலாளர் சேதுராம், தெற்கு நகர செயலாளர் மாரியப்பன் உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து உள்ளனர்.மீனாட்சிபுரம், மேலச் சொக்கநாதபுரத்தில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, மீனாட்சிபுரம் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தேவாரத்தில் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெரியகுளம்: மூன்றாந்தலில் மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் முகமதுசலீம், நகர அவைத்தலைவர் கோம்பையன், நிர்வாகிகள் வெங்கடேசன், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.வடுகபட்டியில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ் தலைமையில் மனித சங்கிலி நடந்தது. பேரூர் செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் ராஜகுரு, ஜெயராமன், சுந்தரபாண்டியன், லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.