உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.ம.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அ.ம.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் அ.ம.மு.க., சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம் தலைமை வகித்தார். நகர் செயலாளர் வச்சிரவேல், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமலைநாகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி தொகுதி பொறுப்பாளர் அய்யணன் வரவேற்றார். கூட்டத்தை விளக்கி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், பொறியாளர் அணி மாநில துணை அமைப்பாளர் விமல்முருகன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம், வரும் லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க., வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் குமார் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ