உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அ.ம.மு.க.,

தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அ.ம.மு.க.,

தேனி: தேனியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிட உள்ளதால் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.தேனியில் நேற்று வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி பொறுப்பாளர்கள் ரெங்கசாமி, தங்கதுரை, பெரியகுளம் பொறுப்பாளர்கள் கரிகாலன், தொட்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் போட்டியிட உள்ளதால் தேர்தல் பணியை தீவிரப்படுத்த அறிவுருத்தப்பட்டனர்.இரு சட்டசபை தொகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர்களுக்கு தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பூத்கமிட்டி பணிகள், பிரசாரத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்வை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டசபை தொகுதி வாரியாக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை