மேலும் செய்திகள்
ஸ்ரீ ஹிமாலயா ஓட்டல் திறப்பு விழா
01-Apr-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ஓட்டல் உரிமையாளர்களை உணவு பாதுகாப்புத் துறையில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட சைவ, அசைவ ஓட்டல்கள் உள்ளன. ஓட்டல்களில் உணவின் தரம், சுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். தங்களுக்கான லைசென்ஸை புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்களை குறி வைக்கும் மர்ம நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை உணவு பாதுகாப்பு துறையில் இருந்து பேசுவதாகவும், . ஓட்டலில் குறைகள் இருப்பதாக சுட்டி காட்டி ஆய்வுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க பணம் கேட்டும் மிரட்டுகின்றனர். ஓட்டல் உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பேசுவதாக ஓட்டலுக்கான லைசன்ஸ் புதுப்பித்தல் ஓட்டலில் சுகாதாரம் ஆகியவற்றை மையப்படுத்தி ஆய்வுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். பிரச்னை வராமல் இருக்க சிலரிடம் பணமும் கேட்டுள்ளனர். உணவு பாதுகாப்பு துறை, அரசின் விதிகளுக்கு உட்பட்டே ஓட்டல்கள் செயல்படுகிறது. விழிப்புணர்வு இல்லாத உரிமையாளர்கள் சிலரை அலைபேசியில் மிரட்டி உள்ளனர். இது பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த அைபேசி எண் குறித்து போலீசிலும் புகார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜனகர் ஜோதிநாதன் கூறியதாவது: பல மாவட்டங்களில் இது போன்ற மிரட்டல்கள் நடந்துள்ளது. ஆட்கள் வராமலேயே சென்னையில் இருந்து போனில் மிரட்டி ஜிபே மூலம் பணத்தை பெற்றுள்ளனர். பல அலைபேசி எண்களை பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் செய்ய தயங்குகின்றனர். ஆன்லைன், போன் மூலமாக தொடர்பு கொண்டு லைசன்ஸ் அல்லது ஓட்டலின் குறைகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை தெரிவிப்பதில்லை. நேரடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
01-Apr-2025