உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராணுவ வீரருக்கு சரமாரி கத்திக்குத்து

ராணுவ வீரருக்கு சரமாரி கத்திக்குத்து

கம்பம்: கம்பம் பைபாஸ் ரோட்டில் நேற்று மாலை ராணுவ வீரர் சரவணக்குமார் 25,யை கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கம்பம் ஏக லூத்து ரோட்டில் வசிக்கும் ராஜாங்கம் மகன் சரவணக்குமார். ராஜஸ்தானில் உள்ள ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு கம்பம் வந்துள்ளார். கடந்த 2 ம் தேதி டுவீலரில் வேலப்பர் கோயில் வீதியில் வந்த போது, புதுப்பட்டியை சேர்ந்த யாசர் அராபத் மகன் ரஹ்மான் என்பவர் தனது டூ வீலரில் வேகமாக வந்து, இவர் மீது மோதியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரஹ்மான், சுந்தர் என்பவரும் சேர்ந்து சரவணக்குமாரை தாக்கியுள்ளனர். சரவணக்குமார் புகாரின்பேரில் தெற்கு போலீசார் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை கம்பம் பைபாஸ் ரோட்டில் டூவிலரில் சென்ற ராணுவ வீரர் சரவணக்குமாரை கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. ஆபத்தான நிலையில் இருந்த சரவணக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை தேனி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி உள்ளனர். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ