உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சைலன்ட்வாலி எஸ்டேட், முதல் டிவிஷனை சேர்ந்த வினோத், ஷக்கிலா தம்பதியினருக்கு 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஷக்கிலா நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குழந்தைக்கு தாய்பால் கொடுத்தார். அதன்பிறகு காலை 7:00 மணிக்கு குழந்தையை பார்த்தபோது அசைவற்ற நிலையில் கிடந்தது.மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் கொடுத்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை