உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நவ., 24ல் தடகள போட்டி வீராங்கனைகள் தேர்வு 

 நவ., 24ல் தடகள போட்டி வீராங்கனைகள் தேர்வு 

தேனி: தேசிய, சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 14,16 வயதிற்குட்பட்ட பிரிவில் பங்கேற்க வீராங்கனைகள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் நவ.,24ல் நடக்கிறது. மாவட்ட தடகள கழக செயலாளர் அஜய் கார்த்திக்ராஜா கூறியதாவது: அத்தலடிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி உடைய 14,16 வயது வீராங்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி உட்பட 17 மாவட்டங்களில் வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேனியில் நவ., 24ல் வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 டிச.,21 முதல் 2013 டிச., 20க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். 16 வயதிற்குட்பட்ட பிரிவில் 2009 டிச.21 முதல் 2011 டிச.,20க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். 14 வயது பிரிவில் 3 பிரிவுகளில் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 16 வயது பிரிவில் 60 மீ., ஓட்டம், 600 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு, ஈட்டி, தட்டு எறிதல் போட்டிகள் நடக்கிறது. ஒருவர் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்க முடியும். பங்கேற்க வருபவர்கள் காலை 9:00 மணிக்கு உரிய வயது சான்றிதழுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 90807 31639 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை