உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

மூணாறு ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

மூணாறு: மூணாறு அருகே சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு டிவிஷனைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முனியசாமி 34.இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மதுபோதையில் பழைய மூணாறு பகுதியில் கேரள அரசு போக்குவரத்து கழகம் டிப்போ அருகே முதிரைபுழை ஆற்றில் குதித்தார். உடனிருந்தவர்கள் முனியசாமியை காப்பாற்ற முயன்றும் இயலவில்லை. தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் முனியசாமியின் உடலை மீட்டனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !