மாணவர்களுக்கு மூலிகைச் செடிகள் குறித்த விழிப்புணர்வு
மாணவர்களிடம் மூலிகைச் செடிகள் குறித்த விழிப்புணர்வை துவக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் அதன் அவசியம் தெரியவரும். தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள், இயற்கை சார்ந்த அமைப்புகளின் இயக்குனர்கள், ஆசிரியர்களும் கடந்த சில மாதங்களாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போது மூலிகை செடிகளின் அவசியமும் அதனை வளர்ப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.உயிர் வாழத் தேவை ஆக்சிஜன். அதனை பெறுவதற்கு மரங்கள் அவசியம். அதனால் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களிடமிருந்தே கற்றுக் கொடுத்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் வாழ ஆக்ஸிஜன் கிடைக்கும். அதேபோல் பக்க விளைவுகள் இல்லாமல் மனிதனின் நோயை குணப்படுத்தும் மூலிகை செடிகளின் அவசியத்தையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். நுாற்றாண்டுகளுக்கு முன் மிகப் பெரிய காயத்திற்கும் மூலிகைச் செடிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். விழிப்புணர்வு அழகேசன், ஆசிரியர்: சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். சிறு வயதில் இருந்தே மாணவர் களுக்கு மரக்கன்றுகளின் பயன்களையும் அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளியிலேயே விதைகளை கொடுத்து, நடவு செய்து பராமரித்து வளர்க்கும் நடைமுறைகளை மாணவர்களே நட்டு வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மரக்கன்றை நட்டு வளர்த்து வருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றோம். காலை நேரத்தில் தாவரங்களின் பெயர்களையும் மூலிகை தன்மையையும் தினந்தோறும் எடுத்துரைத்து வருகின்றோம்., என்றார். ஆக்சிஜன் தரும் துளசி கணேசன், ஆசிரியர்: பள்ளிகளில் துளசி செடி கண்டிப்பாக வளர்க்க வேண்டும். இதில் கூடுதல் ஆக்சிஜன் உருவாகிறது. கடுமையான வெப்பத்தில் ஆக்சிஜன் குறைபாட்டால் சிரமம் அடையும் மக்களுக்கு துளசி அதிகம் பயன்படுகிறது. பள்ளி மாணவர்கள் அதிக நேரம் பள்ளியிலேயே உள்ளனர். மாசு ஏற்படுத்தும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையோடு ஒன்றி வாழப் பழகிக் கொண்டாலே மாசில்லா கூடலுாரை எளிதில் பார்க்கலாம்.