உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

போடி: தேசிய அங்கக உற்பத்தி திட்டம், காபி வாரியத்தில் விவசாயிகள் உறுப்பினராக பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் போடி காபி வாரிய அலுவலகத்தில் நடந்தது. இந்திய காப்பி வாரிய துணை இயக்குனர் (விரிவாக்கம்) தங்கராஜா தலைமை வகித்தார். தாண்டிக்குடி காபி வாரிய ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இளநிலை தொடர்பு அலுவலர்கள் சக்திவேல், சாமுவேல் சஞ்சய் வரவேற்றனர்.தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் காபி பயிரிடுவது, பயன்கள் குறித்தும், காபி வாரியத்தில் விவசாயிகள் உறுப்பினராக பதிவு செய்வதற்கான செயல்முறை விளக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை