உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆண் குழந்தை பலி

 ஆண் குழந்தை பலி

தேனி: கம்பம் பாரதியார் நகர் அழகேசன், தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின், வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு தாய்பால் கொடுத்து துாங்கச் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை பார்த்த போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. அழகேசன், அவரது தம்பி பாலகுமார் ஆகியோர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் கொண்டு சென்றனர். பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரியா புகாரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை