உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருவிழாவில் ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிபரப்ப தடை; அமைதி கூட்டத்தில் தீர்மானம்

திருவிழாவில் ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிபரப்ப தடை; அமைதி கூட்டத்தில் தீர்மானம்

பெரியகுளம் : கோயில் திருவிழாவில் ஜாதி ரீதியான பாடல்களை ஒலிக்க தடை செய்வது என தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா அக்.8ல் துவங்குகிறது. இதற்காக பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் மருதுபாண்டி, டி.எஸ்.பி., நல்லு, எஸ்.ஐ., முருகப்பெருமாள், வி.ஏ.ஓ., ராஜவேல்,ஜெயமங்கலம் கிராமம் அனைத்து சமுதாய முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவில் அந்தந்த சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றும் சுவாமி கும்பிடுவது என்றும், திருவிழாவில் ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிக்கவும்,பேனர்கள் வைக்கத்தடை விதித்தும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை