மேலும் செய்திகள்
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
5 minutes ago
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
6 minutes ago
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு
7 minutes ago
மூணாறு நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்
16 minutes ago
தேனி:தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் மதுபோதையில் பயணிகளிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வது அகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு, தனியார் மதுபார்கள் செயல்படுகின்றன. இங்கு மது குடித்து விட்டு வரும் குடிமகன்கள் பலர் அரை நிர்வாண கோலத்தில் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே இரவு பகலாக படுத்திருகின்றனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண் பயணிகள் முகம் சுளிப்பதுடன், அச்சத்துடன் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. யாசகம் வழங்காவிட்டால் சாபம்:இரவில் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு முழு போதை ஆசாமிகள் சிலர் பஸ்களில் ஏறி பயணிகளிடம் யாசகம் கேட்கின்றனர். பயணிகளை ஆசி வழங்குவது போல் பெயரை கேட்கின்றனர். பணம் வழங்காதர்களை சாபம் விடுவது, திட்டுவது தொடர்கிறது. போதையில் பயணிகளிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago
16 minutes ago