உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

தேனி:தேனியில் பெங்களுரூ வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலாவைச் சேர்ந்தவர் திலீப். இவரும் இவரது சகோதரி ராதா மகன் கலுவாவும் ஆண்டிபட்டி பகுதியில் கண்ணாடி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த சிப்ஸ் கடை விற்பனையாளர் மோகன் அறிமுகமானார். ஏப்.,15ல் திலீப், கலுவா ஆகியோரை தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு மோகன் வரவழைத்து டூவீலரில் பைபாஸ் பகுதிக்கு அழைத்து சென்றார்.அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை கடத்தியது. போலி நகைகள் விற்பவர்கள் தானே எனக்கூறி அந்த கும்பல் அவர்களை தாக்கியது. தேனி கருவேல்நாயக்கன்பட்டி தென்னந்தோப்பில் வைத்து மட்டையால் தாக்கினர். கலுவாவை அங்கேயே விட்டுவிட்டு, திலீபை வேறு பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கிருந்து தப்பிய கலுவா பெங்களூரு சென்றார். திலீப்பின் மற்றொரு சகோதரி நிர்மலாவை அழைத்து வந்து தேனி போலீசில் ஏப்.,24ல் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில் திலீப்பை அடித்து கொலை செய்து ஜல்லிபட்டி கண்மாய் கரையில் புதைத்தது தெரிந்தது. இக்கொலை வழக்கில் கருவேல்நாயக்கன்பட்டி முகேஷ்பாண்டி 25, ஆகாஷ் 20, முத்துப்பாண்டி 20, மோகன் 30, சக்கரைப்பட்டி முருகன் 45, இளையராஜா 37, முத்தனம்பட்டி சதீஷ்குமார் 32, தேனி சவுமியன் 31, ஆகியோரை போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். நேற்று இதில் தொடர்புடைய கருவேல்நாயக்கன்பட்டி மதனை 28, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை