மேலும் செய்திகள்
ஊர்வலம்
2 hour(s) ago
ஒய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
ரூ.70 கோடியில் மெகா உணவுப்பூங்கா திறப்பு
2 hour(s) ago
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
2 hour(s) ago
சர்வதேச மனநல தின ஊர்வலம்
2 hour(s) ago
கூடலுார்: கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் அணைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். எவ்வித தடயமும் இல்லாததால் திரும்பினர். முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநிலம் திருச்சூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மெயில் வந்தது. இதனையடுத்து அம்மாநில வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் ராய்மோகன் தலைமையில் 10 பேர் அணைப்பகுதியில் இரு மோப்ப நாய்களுடன் சோதனையிட்டனர். மெயின் அணை, ஆய்வா ளர் குடியிருப்பு, ஷட்டர் பகுதிகள், பேபி அணை, நீர்க்கசிவு காலரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்டனர். ஆனால் எந்த தடயமும் இல்லாததால் படகு மூலம் தேக்கடிக்கு திரும்பினர். இச்சோதனையில் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் பங்கேற்றனர். அணையை கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங் கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அணைப்பகுதிக்கு செல்ல வல்லக்கடவு வனப்பகுதி வழியாக ஜீப் பாதையும், தேக்கடியில் இருந்து படகுமூலம் செல்லும் நீர்வழிப் பாதையும் உள்ளது. இந்த இரு பாதைகளிலும் கேரள வனத்துறையின் அனுமதியின்றி யாரும் அணைக்கு செல்ல முடியாது. சமீபத்தில் அணைக்கு செல்ல முயன்ற தேனி எம்.பி.,க்கும் அனுமதி தரவில்லை. வனப்பகுதிக்குள் தனிமைப்படுத்தப்பட்ட அணையாக இது உள்ளது. பாதுகாப்பை மீறி யாரும் அணைப்பகுதிக்குள் செல்ல முடியாது. இச்சூழ்நிலையில் வெடிகுண்டு வைத்ததாக வதந்தி பரப்புவதை கேரளா நிறுத்திக்கொள்ள வேண்டும். 2011 வரை கேரள போலீஸ் அங்கு இல்லை. தமிழக அரசு சம்பளம் கொடுக்கும் 10 போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். ஆனால் அணையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக டி.எஸ்.பி., தலைமையில் 125 கேரள போலீசார் அங்கு பணியில் உள்ளனர். தற்போது வெடிகுண்டு மிரட்டல் என்ற புரளியை முன்வைத்து மேலும் கூடுதல் போலீசார நியமித்து முழுக் கட்டுப்பாட்டையும் கேரளா கொண்டுவர திட்டம் திட்டியுள்ளது. இதனைத் தடுக்க இரு மாநில போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு மூலம் அட்வகேட் ரசூல் ஜோய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு, அணையில் எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என மத்திய அரசும், தமிழக அரசும் விளக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் நாடகத்தை கேரளா திட்டமிட்டு செய்துள்ளது என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago