உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி எம்.பி., பிறந்தநாள்  விழாவில் நுால் வெளியீடு

தேனி எம்.பி., பிறந்தநாள்  விழாவில் நுால் வெளியீடு

தேனி: பழனிசெட்டிபட்டி ஓட்டலில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் பிறந்த நாள் விழா, ராஜன்வீரமர் எழுதிய, தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவது எப்படி' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா நடந்தது. ஓட்டர்ஸ் வாய்ஸ் இந்தியா தலை வர் ராஜன் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மனோகரன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், நமது மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெகநாத்மித்ரா முன்னிலை வகித்தனர். எம்.பி., கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. புத்தகவெளியீட்டு விழாவில் முதல் பிரதியை ந.ம.மு.க., கட்சியின் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா, தங்கதமிழ்செல்வனிடம் வழங்கினார். விழாவில் போடி தி.மு.க.,கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், நகரச் செயலாளர்கள் நாராயணபாண்டியன், பாலமுருகன், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, சிறப்பு விருந்தினர்கள் கீதா சசி, வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், செல்வம், செல்வக்குமார், ராஜ்மோகன், முத்துகோவிந்தன், தி.மு.க, மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர். லயன்ஸ் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சவுந்தர், கண்ணன், சீனிவாசன், லால், மாஸ்டர் சேப்டி செந்தில், ராதா கிருஷ்ணன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் தி.மு.க., நிர்வாகி முருகேசன், சங்கர், அரசு ஒப்பந்ததார் ஜெகநாதன், வசந்த் கலந்து கொண்டனர். முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்ற அமைப்பாளர்பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ