உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தயாராகும் தாவரவியல் பூங்கா

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தயாராகும் தாவரவியல் பூங்கா

மூணாறு:ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய விடுமுறையில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. மூணாறில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் செல்லும் ரோட்டில் மாவட்ட சுற்றுலா துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உள்ளது. அதில் வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்பட 1500 வகை வண்ண பூக்கள் உள்ளன. அவை காலநிலைக்கு ஏற்ப பூக்கும். தற்போது அஷிலியா, டாலியா, ரோஜா, இம்பேஷியன்ஸ் உட்பட நூற்றுக் கணக்கில் பூக்கள் பூத்துள்ளன. அவற்றில் தாய்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட வகை அந்தூரியம் பூக்கள் பல வண்ணங்களில் வெகுவாக கவர்ந்து வருகிறது. தயார்: சரஸ்வதி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் நெருங்குவதால், அந்த விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அவர்களை மகிழ்விக்கும் வகையில் பூங்கா பராமரிக்கப்பட்டு தயாராகி வருகிறது. பகலில் வண்ண பூக்களால் கவரப்படும் பூங்காவில் இரவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று ' மியூசிக்கல் பவுண்டன்', டோம் தியேட்டர் உள்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. தவிர அக்.1 முதல் இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பூங்காவை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை