உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வியாபாரி இறப்பு : உறவினர்கள் தர்ணா

வியாபாரி இறப்பு : உறவினர்கள் தர்ணா

தேனி: ஆண்டிபட்டி மஞ்சனுாத்து காளியம்மன் கோவில்தெரு ராமன் 52, தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பழக்கடை நடத்தினார். இவரை வீரபாண்டி திருவிழாவில் கடை நடத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பொன்மலர் கூறினார்.கடை வாடகையாக ரூ.3ஆயிரம் வேண்டும் என ராமனிடம், பொன்மலர் தகராறு செய்தார். பழக்கடையில் இருந்த பழப்பெட்டிகளை எடுத்து சென்று ராமனை தாக்கினார். இச்சம்பவங்களை ராமன், அவரது மனைவி பெத்தனாட்சியிடம் அலைபேசியில் தெரிவித்து விட்டு குமணன் தொழுவில் விஷமருந்தினார்.அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமனின் உறவினர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை