| ADDED : பிப் 18, 2024 01:45 AM
கம்பம்,: ண்டுக்கல் முதல் குமுளி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் தொடர்ந்து பழுதாகி இருப்பதால் அப்பகுதி இருளில் மூழ்கி விபத்து அபாயம் உள்ளது.திண்டுக்கல் முதல் குமுளி வரை உள்ள ரோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இருவழிச்சலையாக மாற்றி உள்ளது. தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி , பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த பைபாஸ் சாலைகள் ஆரம்பம் மற்றும் முடியும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பைபாஸ் சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்ல இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்படுகிறது. ஆனால் அந்த இடங்களில் வெளிச்சம் இன்றி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்தை தவிர்க்க தான் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.ஆனால் கடந்த சில மாதங்களாகவே சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பைபாஸ் ரோடு சந்திப்புகளில் உயர் மின்கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை. பைபாஸ் சந்திப்புகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இரவில் வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பலர் பைபாஸ் சந்திப்புகள் வெளிச்சம் இல்லாததால் குழப்பமடைந்து ஊருக்குள் வந்து விடுகின்றனர். விபத்துக்களும் நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.