உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீப்பற்றிய கார்: போலீசார் வழக்கு

தீப்பற்றிய கார்: போலீசார் வழக்கு

போடி : போடி அருகே மீனாட்சிபுரம் கன்னிமார் கோயில் தெரு மகேந்திரன் 38. இவர் தனியார் உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான காரை மீனாட்சிம்மன் கண்மாய் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டி நிறுத்தி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கார் தீ பற்றி எரிந்தது. அருகே வசிக்கும் ராமச்சந்திரன், மகேந்திரனுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்ட மகேந்திரன் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை