வீட்டின் முன் நிறுத்திய கார் இரவில் திருட்டு
பெரியகுளம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 60. பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவில் உள்ள இவரது மருமகன் தங்கவேல் வீட்டுக்கு மாலையில் குடும்பத்துடன் காரில் வந்தார். காரை வெளியில் நிறுத்தி இருந்தார். இரவு 8:00 மணிக்கு வந்து பார்த்தபோது காரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் திருடு போனது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். பெரியகுளத்தில் சிட்டிபாபு, விஜயகுமார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் டூவீலர்கள் திருட்டினை பல மாதங்களாக போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் கார் திருட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளது.