உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முடிவிற்கு வருகிறது ஏலக்காய் பறிப்பு பணி அடுத்த சீசன் ஆகஸ்டில் துவங்க வாய்ப்பு

முடிவிற்கு வருகிறது ஏலக்காய் பறிப்பு பணி அடுத்த சீசன் ஆகஸ்டில் துவங்க வாய்ப்பு

கம்பம்: ஏலக்காய் பறிப்பு முடிவிற்கு வருவதால் அடுத்த சீசன் வரும் ஆகஸ்டில் துவங்க வாய்ப்பிருப்பதாக ஏல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் கேரளா, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி சேர்ந்தவர்கள் ஏல விவசாயத்தில் உள்ளனர்.ஏலக்காய் சாகுபடியில் காய் பறிப்பது ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டில் துவங்கும். ஒரு முறை பறித்த பின் 60 நாட்கள் கழித்து மீண்டும் பறிக்கலாம். அதாவது 5 அல்லது 6 முறை காய் பறிப்பு விவசாயிகளால் மேற்கொள்ளப்படும். தற்போது இந்த சீசனுக்குரிய காய் பறிப்பு முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இப்போது 5, 6 வது ரவுண்ட் காய் பறிப்பு நடந்து வருகிறது. இது பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை இருக்கும். அதன் பின் அடுத்த சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் தான் துவங்கும்.இந்நிலையில் தற்போது இரண்டு பறிப்புகளுக்கு இடையே உள்ள கால அளவு 60 நாட்களில் இருந்து 80 நாட்களாக உயர்ந்து விட்டது. காரணம் கடந்த ஆனி, ஆடியில் மழை பெய்யாததே இதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.மேலும் வரும் சீசனுக்கு முன்பாக மழை கிடைத்தால் தான், ஆகஸ்டில் காய் பறிக்க முடியும் என்றும், இல்லையென்றால் காய் பறிப்பு தள்ளிப் போகும் என்றும் கூறுகின்றனர். மார்ச் முதல் ஜூலை வரை 5 மாதங்களுக்கு தோட்டங்களில் பராமரிப்பு வேலைகள் நடைபெறும். நேற்று சராசரி விலை கிலோவிற்கு ரூ.1672 வரை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ