உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

கம்பம் : கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சசி மனைவி ரெஜினா 33, இவரது சகோதரியின் கணவர் முருகனுக்கும், இதே ஊரில் நேசன் கலா பள்ளி தெருவில் வசிக்கும் தங்கராஜ் குடும்பத்தாருக்கும் சாக்கடை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் தங்கராஜ், தமிழ்செல்வன், தர்மா, தனுஷ் ஆகியோர் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் ரெஜினா, அக்கா மகன் யோகேஸ். முருகன், ரமேஸ் ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர். ரெஜினா புகாரின் பேரில் 4 பேர்கள் மீதும் ராயப்பன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை