உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சி தலைவர், கவுன்சிலரை மிரட்டிய நிர்வாகிகள் மீது வழக்கு: தலைவர், கவுன்சிலர்கள் மீதும் வழக்கு

பேரூராட்சி தலைவர், கவுன்சிலரை மிரட்டிய நிர்வாகிகள் மீது வழக்கு: தலைவர், கவுன்சிலர்கள் மீதும் வழக்கு

தேவதானப்பட்டி; தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி, கவுன்சிலர் ராஜவேல் ஆகியோரை ஜாதியை குறிப்பிட்டு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், அவரது தந்தையான தி.மு.க., செயலாளர் தமிழன் உட்பட மூவர் மீதும், ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பேரூராட்சி தலைவர், அவரது கணவர், 3 கவுன்சிலர்கள் மீதும் தேவதானப்பட்டி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. தலைவராக தமிழ்செல்வி (தி.மு.க.,), துணைத்தலைவராக ஞானமணி (தி.மு.க.,) உள்ளனர். டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் தலைவர், துணைத்தலைவர் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தலைவர் தமிழ்செல்வி, 13 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜவேல் இருவரும், 'தங்களுக்கு தெரியாமல் நடக்கும் பட்டிமந்தையில் ரோடு அமைக்கும் பணியை நிறுத்த கூறினர். அப்போது அங்கு வந்த துணைத்தலைவர் ஞானமணி மகன் தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், இவரின் தந்தை தி.மு.க., செயலாளர் தமிழன், யாசிக் ஆகியோர், தலைவர், கவுன்சிலரை ஜாதியை கூறி திட்டி, கத்தி, அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜவேல் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ஸ்டீபன் உட்பட மூவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆண்டிபட்டி, முத்தனம்பட்டி ஆனந்தக்குமார் 32. கெங்குவார்பட்டி பட்டிமந்தையில் நபார்டு திட்டத்தில் ரூ.1.20 கோடியில் ரோடு பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இரு மாதங்களாக பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி கணவர் அரசு பள்ளி ஆசிரியர் சவுந்திரபாண்டி, தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜவேல், சாந்தி, ராஜம்மாள் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டினர். இதில் சவுந்திரபாண்டி பலமுறை மிரட்டி பணம் வாங்கி யுள்ளார். நேற்று முன்தினம் ரோடு பணி நடக்கும் போது பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, சவுந்திரபாண்டி, கவுன்சிலர்கள் உட்பட ஐந்து பேரும், வேலையை நிறுத்தவும், தன்னை அவதூறாக பேசி பணியாளர்களை மிரட்டியதாக புகார் அளித்தார்.தேவதானப்பட்டி போலீசார் தலைவர், கணவர் மற்றும் 3 கவுன்சிலர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை