உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகள் வீட்டில் திருடிய தந்தை மீது வழக்கு

மகள் வீட்டில் திருடிய தந்தை மீது வழக்கு

போடி : போடி தேவர் காலனி ரோடு குடிநீர் தொட்டி பின்புறம் பகுதியில் வசிப்பவர் லதா 31. திருமணமான நிலையில் இவரது தந்தை தனுஷ்கோடி 60, இவரது வீட்டிலே தங்கி உள்ளார். தற்போது கணவனுடன் லதா குடியிருந்து வருகிறார். லதாவிற்கு சொந்தமான வீட்டில் பலமுறை திருடு போய் உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வீட்டின் கதவை தந்தை தனுஷ்கோடி திருடி, தெய்வேந்திரன் என்பவரிடம் ரூ.1500க்கு விற்பனை செய்துள்ளார். மகள் லதா புகாரில் போடி டவுன் போலீசார் தனுஷ்கோடி, தெய்வேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி