உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

 கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

போடி: போடி மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் வினோத்பாபு 36. இவர் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் போடி குலாலர்பாளையம் தெருவை சேர்ந்த மணிமாறன் 52, என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு வினோத்பாபுவை தகாத வார்த்தையால் பேசி, மது பாட்டிலை காண்பித்து கொலை செய்து விடுவதாக மணிமாறன் மிரட்டி உள்ளார். வினோத்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்