கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
தேனி: தேனி அரண்மனைப்புதுார் மெயின்ரோடு செல்வதேவி 26. இவரது கணவர் காளிதாஸ் 28. இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் முடித்தனர்.காளிதாஸ் வேறு பெண்ணுடன் பழகி, மனைவியை அடிக்கடி தாக்கினார். இதுகுறித்து மனைவி தேனிஅனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் இருதரப்பினரையும் சமாதானம்செய்து அனுப்பினர். இந்நிலையில் டிச.17 ல் அரண்மனைப்புதுார் காளியம்மன் கோயில் தெருவில்,மனைவி செல்வதேவி, கணவரை வீட்டிற்கு அழைத்தார். அப்போது கணவர் காளிதாஸ்,மாமனார் பரமானந்தம், மாமியார் ருக்குமணி ஆகிய மூவரும் செல்வதேவியில் சமூகத்தை கூறி இழிவாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்தவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பாதிக்கப்பட்ட செல்வதேவி புகாரில் காளிதாஸ் உட்பட மூவர் மீது பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மணிமாறன் பெண் வன்கொடுமை,எஸ்.சி.எஸ்.டி., தீண்டாமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.