காலிபிளவர் விளைச்சலும் விலையும் அதிகரிப்பு
சின்னமனூர்; காலிபிளவர் விளைச்சலும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடவு செய்த 60 நாளில் அறுவடை செய்யலாம். வியாபாரிகள் மூடை கணக்கில் தான் கொள்முதல் செய்வார்கள். ஏக்கருக்கு 8 டன் வரை மகசூல் கிடைக்கும். செலவு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகும். தற்போது மார்க்கெட்டில் ஒரு பூ விலை ரூ.20 முதல் 30 வரை விலை கிடைத்து வருகிறது. இது கட்டுபடியான விலையாகும். விளைச்சலும், விலையும் திருப்தியாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.