உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்

 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ஊன்றுகோல், அலைபேசி, காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்டவை 43 பேருக்கு ரூ. 6.31 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. மாற்றுத்திறன் மாணவர்கள், இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள், ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி விழாவை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை