உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செப்.27, 28ல் சுருளி அருவியில் சாரல் விழா 

செப்.27, 28ல் சுருளி அருவியில் சாரல் விழா 

தேனி: மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் செப்.,27,28 ல் சுருளி அருவியில் சாரல் விழா நடக்கிறது. தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை பள்ளி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி நடக்கிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பூச்செடிகள், மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. சிறுதானிய உணவு அரங்குகள், அரசு துறைகளின் விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்காக குடிநீர் வசதி, வாகனநிறுத்துமிடம், சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை